
posted 19th October 2022
ஏழுநாள் காய்ச்சலால் பிறந்து எட்டு மாதங்களேயான ஆண்குழந்தை உயிரிழந்துள்ளது.
கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த பிள்ளைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலினாலும், சளியினாலும் அவதியுற்ற நிலையில் கடந்த 14 ம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதோடு பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)