
posted 12th October 2022
இந்த விழிப்புணர்வுப் போராட்டமானது, நடைமுறைப்படுத்தப் பட வேண்டிய தமிழ் மக்களின் உரிமையின் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்தும் முகமாக வடக்கிலும், கிழக்கிலும் உள்ள 8 மாவட்டங்களிலும் வாழும் மக்களின் சாத்வீகமாகன, ஜனநாயகமான 100 நாட்கள் செயல் முனைவின் விழிப்புணர்வு போராட்டமானது 73ஆவது நாளை எட்டியுள்ளது.
மன்னாரில் இப்போராட்டமானது, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் அணுசரனையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையம் (போரம்) மற்றும் 'மெசிடோ' நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது.
இப்போராட்டத்தில் பங்குகொண்ட மக்களின் தமது ஆதங்களை;
- 'ஒன்று கூடுவது எமது உரிமை'
- 'கருத்துச் சுதந்திரம் எமது உரிமை'
> 'கௌரவ உரிமையுடன் அரசியல் தீர்வு வேண்டும்'
என்ற பாதைகளை ஏந்தி வெளிப்படுத்தினர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)