எஸ்.டீ. றவூப் அமெரிக்கா பயணம்

மக்கள் அபிமானம் வென்ற வானொலி அறிவிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவிலாளருமான எஸ்.டீ. றவூப், சர்வதேச ஒலி, ஒளிபரப்பாளர் ஒன்றியம் அமரிக்காவின் நியூயோர்க் நகரில் நடாத்தும் சர்வதேச ஊடக மாநாடு மற்றும் கண்காட்சியில் - 2022 கலந்துகொள்வதற்காக அமரிக்கா பயணமாகியுள்ளார்.

இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கலைகளின் பிறப்பிடமான கருங்கொடியூர் எனும் அக்கரைப்பற்றில் பிறந்தவரே எஸ்.ரீ. ரவூப்.

எஸ்.ரீ. ரவூப் எனும் அறிவிப்பாளர், ஆளுமை கலைஞர் தனது இரு தசாப்தங்கள் கடந்து விட்ட கலை இலக்கிய ஊடகத் துறையில் பல விருதுகளை வென்று அவ்விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  • 2018 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் வழங்கி வைக்கப்பட்ட சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான ஜனாதிபதி விருது,
  • 2020 இல் இலங்கை அரசின் சிறந்த அறிவிப்பாளருக்கான தேசிய விருது,
  • 2021 சிறந்த வானொலி அறிவிப்பாளர் தேசிய விருது,
  • அரச வானொலி விருது விழாவில் 2021 இல் சிறந்த மாலை நேர நிகழ்ச்சி அறிவிப்பாளருக்கான விருது,

என பல உள்நாட்டு, வெளிநாட்டு கனதியான விருதுகளை பெற்று தான் சார்ந்த துறைக்கு பெறுமானம் கூட்டியவர் எஸ்.ரீ. ரவூப் ஆகும்.

வானொலி ஊடகத்துறை சார்ந்து பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு பயிற்சிகள், கற்கை நெறிகளை மேற்கொண்டுள்ள ரவூப், அப் பயிற்சிகள், கற்கைகள் ஊடாக தான் பணியாற்றும் ஊடக நிறுவனங்களின் உன்ன உயர்வுக்கும், வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு மிக்கதாய் உழைத்துள்ளார்.

மேலும், வானொலி ஊடகத்துறை சார்ந்து திறமையுள்ள இளையவர்களை உள்வாங்கி ஊக்கப்படுத்துவதிலும் எஸ்.ரீ. ரவூப் பாரிய பங்களிப்பினை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டீ. றவூப் அமெரிக்கா பயணம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)