
posted 28th October 2022
நிந்தவூர்ப் பிரதேசத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவரும் கடலரிப்பு அனர்த்தத்திற்கு நிரந்தரத்தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 65 மில்லியன் ரூபா நிதி குறித்து மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர் ஒருவர், தமது முயற்சியே காரணமென உரிமை கோரியுள்ளமைக்கு நிந்தவூர் பிரதேச சபை கவலையும், கண்டனமும் தெரிவித்துள்ளது.
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர்களுக்கான மாதாந்த அமர்வு தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோதே இக்கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பிற்கு நிரந்தரத்தீர்வு காணும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் உபதவிசாளரும், சிறீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினருமான வை.எல். சுலைமாலெவ்வை, நேரில் உரிய திணைக்கள உயரதிகாரிகள், அமைச்சர் முதலானோரை சந்தித்து எடுத்த பெருமுயற்சியின் பயனாகவே குறித்த 65 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வேலைகளுக்கான விலைமனுவும் கோரப்பட்டுள்ளது.
ஆனால், இந்த விடயம் தொடர்பில் தாமே, முயற்சித்து ஒதுக்கீடு பெற்றதாக அம்பாறை மாவட்ட (திகாமடுள்ள) நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரப் முதுநபீன் முற்றிலும் பொய்யான வதந்தித் தகவல்களை சமூக வலைத்தள ஊடகங்களில் பரப்புவதாக சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட்டு உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.
இதன்போது இது விடயத்தில் உப தவிசாளர் வை.எல். சுலைமா லெவ்வையும் தனது கவலையையும், விசனத்தையும் உறுப்பினர்கள் மத்தியில் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் இத்தகைய செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக சபையில் ஏகமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்.
சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஏகோபித்தும் ஆதரவு தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY