
posted 14th October 2022
சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு கலாச்சார உத்தியோகத்தர்களுக்கு இருக்கிறது.. மாகாண பணிப்பாளர் ராஜ மல்லிகை சிவபாலசுந்தரம் தெரிவிப்பு.
சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சமூகத்தை பாதுகாத்து சரியான வழியில் கொண்டு செல்லும் பொறுப்பு பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களுக்கும் இருக்கிறது என வடமாகாண பண்பாடு திணைக்களத்தின் மாகாணப் பிரதிப் பணிப்பாளர் ராஜ மல்லிகை சிவசுந்தரசர்மா தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வட மாகாண தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கலைகள் ஊடாக எமது பண்பாடு கலாச்சாரம் மற்றும் விழுமியங்களைப் பாதுகாகாக முடியும்.
ஒவ்வொரு பிரதேச செயலாளர்களிலும் மாகாண கலாச்சார உத்தியோகத்தர் கடமையாற்றும் நிலையில் அவர்கள் கடமையாற்றும் பிரதேச செயலகங்களில் சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது.
அண்மையில் வடமாகாண கல்வி பண்பாட்டல்களில் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் எங்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் ஒவ்வொரு பிரதேச செயலக நீதியாக உத்தியோகத்தர்களின் செயற்பாடு தொடர்பில் ஒழுங்குபடுத்தலை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
அதன் அடிப்படையில் வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்ட செயலகங்களிலும் கடமையாற்றும் உத்தியோர்கள், மற்றும் பிரதேச செயலக ரீதியாக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஒழுங்குபடுத்தப்படவுள்ளனர்.
நாட்டிலே ஏற்பட்ட கொரோனா இடர் காரணமாக கலைஞர்கள் தமது தொழில் வாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டவை யாவரும் அறிந்தது.
தற்போது நாட்டில் கொரோனா இடர் தணிந்து கலைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு கிடைத்தது வருகிறது.
எமது திணைக்களத்தினால் அறுபது வயதுக்கு மேற்பட்ட வறிய கலைஞர்களுக்கு மாதம் தோறும் ஐந்தாயிரம் ரூபா வழங்கி வருகிறது
மேலும், எமது திணைக்களத்தின் கீழ் செயற்படும் கலா மன்றங்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கு பல்வேறுபட்ட திட்டங்களை மேற்கொண்டு வருவதோடு செயற்படுத்தியும் வருகிறோம்.
எமது செயற்பாடுகள் தொடர்பில் சமூகமட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் பாரிய பொறுப்பினை ஊடகங்கள் ஆற்றிவருகிற நிலையில் அவர்களுக்கும் இந்த இடத்தில் நன்றியைக் கூறுக்கொள்ள விரும்புகிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY