
posted 6th October 2022
“இஸ்லாமிய தமிழ் இலக்கியப்பரப்பில் மர்ஹும் ஹஸன் மௌலானா கொண்டிருந்த அக்கறையும் ஆழமும் அடுத்த சந்ததிக்கும் இட்டுச் செல்லப்பட வேண்டும். இலக்கிய ஓர்மமிக்க அவரது வழியில் இன்றைய இளம் தலைமுறை இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை அணுகி வளர்க்க முன்வரவேண்டும்” இவ்வாறு அறிஞர் சித்திலெவ்வை ஆய்வுப் பேரவையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.என். மர்சூம் மௌலானா அறைகூவல் விடுத்தார்.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கிய காவலர் தீன் தமிழ்க் கவிஞர், தாஜுல் அதீப் மர்ம் செய்யிது ஹஸன் மௌலானாவின் நினைவேந்தல் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிந்தவூர் கலை, இலக்கியப் பேரவையின் தலைவர் கவிஞர் டாக்டர். ஏ.எம். ஜாபிர் தலைமையில், நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் ஓய்வு பெற்ற அதிபர் எஸ். அகமது, டாக்டர். ஏ.ஆர்.எம். அகமட் மௌலானா, பொறியிலாளர் ரீ. இஸ்மாயில் ஆகியோரும் விசேட நினைவேந்தல் உரைகள் ஆற்றியதுடன்,
கவிஞர் மருதூர் ஹஸன், மூத்த கவிஞர் பாலமுனை பாறூக், எஸ்.எச்.எம். அபுலஹ்லா மௌலானா ஆகியோர் நினைவேந்தல் கவிதைகளும் வாசித்தனர்.
எஸ்.எச்.எம். இர்பான் மௌலானாவின் கிராஅத்துடன் ஆரம்பமான நிகழ்வில் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தொடர்ந்தும் சிறப்புரையாற்றுகையில் பின்வருமறு கூறினார்.
“உலகின் இஸ்லாமிய இலக்கிய வரலாறு எழுதப்படும் போது மர்ஹும் எஸ்.ஏ.ஆர்.எம். ஹஸன் மௌலானா முக்கிய பங்காளராவார். இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியிலும் அதனைக் கட்டிக் காப்பதிலும் முக்கிய பங்கு வகித்தவர் அவராவார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றுவாய் பேராசிரியர் ம.மு. உவைஸ் என அறியும் போது, அவர்களது வழியே இறுதிவரை இஸ்லாமிய தமிழ் இலக்கியம் என்ற எண்ணக் கருவின் வளர்ச்சிக்காகவும், உறுதி நிலைக்காகவும் உழைத்தவர் மர்ஹும் ஹஸன் மௌலானா என்றால் மிகையாகாது.
ஹஸன் மௌலானாவின் இலக்கியப் பரப்பு விசாலாமானது. வரகவியாகத் திகழ்ந்த அவர் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் எனும் பொருளை அடுத்த சந்ததிக்கு வழங்குவதற்காக மாநாடுகளை நடத்தினார்.
அவர் பிறப்பினால் மட்டுமன்றி இறப்பினாலும் புகழ்பெற்ற பெருந்தகையாகத் திகழ்வது அவரது ஓயாத இலக்கியப் பணிகளுக்கு எடுத்துக்கட்டானதாகும்.
அவர் வழியே இளம் தலைமுறையினரும் இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தை அணுக வேண்டும்.
1966 இல்மா பெரும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டை கிழக்கிலங்கையின் மருதமுனையில் நடத்தி வரலாற்றில் தடம் பதித்தவரும் அவராவார். இது அவரது இலக்கிய ஓர்மத்தை வெளிப்படுத்தியது.
இவ்வாறு இஸ்லாமிய தமிழ் இலக்கியத்திற்காக உரமூட்டி மறைந்த ஹஸன் மௌலானாவின் இஸ்லாமிய இலக்கியப் பணிகளைத் தொடரவும், அவரை என்றும் நினைவு கூரவும் ஹஸன் மௌலான ஞாபகர்த்த மன்றம் ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
வருடாந்தம் இப்பணிக்காக ஹஸன் மௌலானா ஞாபகர்த்த விருது வழங்கவும் திட்டமிட்டப்பட்டுள்ளது” என்றார்.
பேரவை உறுப்பினரும் அகர ஆயுதம் தலைவருமான கவிஞர் இலக்கியன் முர்ஷித் நினைவேந்தல் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY