இலவசக் கல்வி - கற்க வாருங்கள் மாணவர்களே!
இலவசக் கல்வி - கற்க வாருங்கள் மாணவர்களே!

அன்பின் தேனாரம் வாசகர் அனைவருக்கும் ஒரு தாழ்மையான வேண்டுகோள்!

நாங்கள் எமது கல்வி நிறுவனத்தூடாக கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பாடசாலை மாணவர்களுக்குக் கல்வி புகட்டிக் கொண்டிருக்கின்றோம். இக்கல்வி ஆங்கிலத்தில்தான் புகட்டப்படுகின்றது. வகுப்புகளை நேரடியாகவும், ஆன் - லைன் (on - line) மூலமாகவும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

இப்போது நமது மக்கள் அதுவும் இலங்கை வாழ் மக்களுக்கு ஆன்- லைன் மூலமாக தமிழில் இலவசமாக் கல்வியைப் புகட்டுவதற்கு முடிவு செய்துள்ளோம்.

இந்தச் செய்தியை நீங்கள் வாசித்து உங்கள் நண்பர்கள், அயலவர்கள், உறவுகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எமது வகுப்புகளுக்கு நீங்கள் எந்தப் பணமும் எமக்குக் கட்டத் தேவையில்லை. மாறாக, நீங்கள் நன்கொடையாகத் தர விரும்பினால் உங்களால் முடிந்ததை எமக்குத் தரலாம். அதனைச் சந்தோஷமாகவும், நன்றியாகவும் ஏற்றுக் கொள்ளுவோம். மேலும், இந்த நன்கொடையானது, எமது இணையத்தளத்தின் செலவுகளுக்கும், நாம் உதவிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் சென்றடையும்.

எமது இணையத் தளத்தின் மூலம் நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வகுப்பை தவறவிடாமல் படித்துக் கொள்ளலாம். எமது இணையத் தளத்தில் ஒரே நேரத்தில் 50 மாணவர்கள் கல்வி கற்றுக் கொள்ளலாம்.

எம்மிடம் படித்த மாணவர்கள் அனைவரும் நல்ல புள்ளிகள் பெற்று பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டும், படித்து முடித்தும், அவரவர் விரும்பிய துறைகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

நாங்கள் இப்போது க.பொ.த. (சா.த) வகுப்புகளுக்கு விஞ்ஞானம் (Biology, Chemistry & Physics) பாடமும், பின்பு கணிதமும் (Mathematics) கற்பிக்க உள்ளோம்.

இதற்காக நாங்கள் உங்களிடம் கேட்பது, எமக்கு உங்கள் பிள்ளைகளின் விஞ்ஞானம், கணிதப் பாடங்களின் புத்தகங்களின் பக்கங்களை போட்டோ பிடித்தோ, வசதியாயின் ஸ்கான் (scan - PDF format) பண்ணியோ அனுப்பி உதவுங்கள். அவற்றை எமக்கு மின்னஞ்சலிலோ அல்லது வாட்ஸ்ஸபினாலோ அனுப்பினால் எமக்கு உதவியாக இருக்கும்.

எம்மைத் தேனாரம் இணையத்தளம் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்;

எமது இணையத்தளம் <<<<<<கிளிக் செய்யுங்கள்

எமது புளெக் (Blog) <<<<<<கிளிக் செய்யுங்கள் (இதில் மாணவர்களுக்கான சில அறிவுரைகள் உள்ளன. அத்துடன், அதில் மாணவர்கள் sign - up பண்ணி விஞ்ஞானத் தலையங்கங்ளை இலவசமாக தரையிறக்கம் (download) செய்து, பிறின்ற் (print) எடுத்துக் கொள்ளலாம்)

எமக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் >>>> admin@thaenaaram.com அல்லது targetteachtutors@gmail.com அல்லது admin@targetteachtutors.co.uk

எமது தொலைபேசி இலக்கம் + (44) (0) 7485575758 (வட்ஸ்ஸப் (whats app), வைபர் (viber) மூலமும் தொடர்பு கொள்ளலாம்

Youtube channelலில் GCSE சில விஞ்ஞானத் தலையங்கங்களும், பரீட்சை வினாக்களும், விடைகளும் உள்ளன. கிளிக் செய்து பயன் பெறுங்கள் >>>>>>Target Teach Tutors - YouTube


நன்றி.

Target Teach Tutors