
posted 11th October 2022
பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய பங்கில் உள்ள சென் மேரிஸ் முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக இன்று (11) அலய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலமைதாங்கி உரையாற்றியதாவது;
இறைவன் எமக்குக் கொடுத்த பிள்ளைச் செல்வங்களை ஆசிரியர்களும், பெற்றோரும் அவர்கள் எமக்குப் பாரம் என நினையாது, வாழ்க்கையில் வரும் எல்லா கஷ்டங்களையும் பொறுத்து அவர்களை நல்வழிகாட்டி, இந்த நாட்டின் நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டியது ஒவ்வொருவரினடைய கடமையாகும்.
எனவே, பிள்ளைகளாக உள்ள எமக்கும் ஒரு கடமை இருக்கின்றது. நாங்கள் அவர்களை கனம் பண்ணி நன்றி கூறி அவர்களின் வழிகாட்டலில் வாழப்பழகுவோம்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)