
posted 4th October 2022
மன்னார் இரணை இலுப்பைக்குளத்தில் செவ்வாய் கிழமை (04) அன்று இஞ்சி அறுவடை விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ் விழாவில் கலந்து கொண்டார். மேலும், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் (விரி) எஸ். ஊதயச்சந்திரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் க. மகேந்திரன், மன்னார் மாவட்ட செயலக பிரதான கலாச்சார உத்தியோகத்தர் நித்தியானந்தன் ஆகியோரும் இவ் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எஸ்.டீ. யபீன் என்ற இரண இலுப்பைக்குளத்தைச் சேர்ந்த விவசாயிக்கு விவசாய திணைக்களம் வழங்கிய தூவல் நீர்பாசன உபகரணம் தொகுதியின் உதவுயுடன் விவசாய திணைக்களத்தின் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக உற்பத்தி செய்தமை பாராட்டப்பட வேண்டியது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)