
posted 14th October 2022
“அம்பாறை மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ வேலைத் திட்டங்கள் சிறப்புற முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மிக அவசியமாகும்.”
இவ்வாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்.ஜே.எம்.ஏ. டக்ளஸ் கூறினார்.
அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைதர்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பிலான மாவட்ட ஊடகவிலாளர்களுக்கான செயலமர்வை ஆரம்பித்து வைத்த உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அனர்த்த முகாமைத்துவ நிலைய அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ. றியாசின் நெறிப்படுத்தலிலும், தலைமையிலும் செயலமர்வு இடம்பெற்றது.
“அனர்த்த முகாமைத்துவத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு” எனும் தலைப்பிலான இந்த முழு நாள் செயலமர்வு அம்பாறை லேக்ஜேய் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்த செயலமர்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையப் பணிப்பாளர் சுகத்திஸா நாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன், உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சீ. றியாஸ், வளிமண்டலவியல் திணைக்கள உதவிப்பணிப்பார் துலாரி பெர்னாண்டோ, மாவட்ட உத்தியோகத்தர் ஏ.எம். பிரோஸ், அனர்த்த முகாமைத்துவ நிலைய ஊடகப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஜனாகஹெதுன் பதிரஜ ஆகியோர் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்குத் தெளிவூட்டும் விளக்க உரைகளை ஆற்றினர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேரந்த சுமார் அறுபது ஊடகவியலாளர்கள் (தமிழ், சிங்களம்) பங்கு பற்றிய இந்த செயலமர்வின் ஆரம்பத்தில் அனர்த்ங்களின் போது உயிரிழந்தோருக்காக இரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“அனர்த்தங்களிலிருந்து மக்களைக்காப்பதிலும், அதற்கென முன்கூட்டியே சரியான தகவல்களை வெளிப்படுத்துவதிலும் ஊடகங்கள் பெரும் பங்காற்றி வருகின்றன.
இந்த வகையில் இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தெடர்பிலான அறிவூட்டல்கள் அவசியமாகும்.
அவசர அனர்த்த நிலமைகள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் வெளியிடலும், அத்தகவல்கள் மக்களைச் சென்றடையவும் இதன் மூலம் வழிவகுக்கப்படுகின்றது.
குறிப்பாக அனர்த்த முகாமைத்துவத்திற்கான விழிப்பூட்டல்கள் அவசியமாவதுடன், அனர்த்த முகாமைத்துவத்திற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்படவும் வேண்டும்.
எனவேதான் நாட்டின் பெர்ருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அனர்த்தம் முகாமத்துவ செயற்பாடுகள் தொடர்பிலான வலுவூட்டல் நடவடிக்கைகள் முன்னெமுடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாகவே ஊடகவியலாளர்களை இது விடயத்தில் வலுவூட்டும் செயலமர்வுகளும் இடம்பெற்று வருகின்றன” என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)