வீதி அகலிப்பு பணியில் கைத்துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ் மாவட்டத்தில் வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் வீதி அகலிப்பு பணியின் போது கைத்துப்பாக்கி ரவைகள் ஆறு நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் அம்பன் வைத்தியசாலை தொடக்கம் கிராமக்கோட்டு சந்தி வரையான பகுதியில் அகலிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் அம்பன் பகுதியில் இடம்பெற்று வரும் வேலையின் போது கைத்துப்பாக்கி ரவைகள் ஆறு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியில் வேலையில் ஈடுபட்டிருந்த 6 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக பொலீஸ் நிலையம் அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.