
posted 17th October 2021

சாணக்கியன்
வடமாகணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரன் அவர்களினால் முன்னெடுக்கப்படும் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் பிரதேசரீதியாக மேற்கொள்ளும் கவன ஈர்ப்பு போராட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் முழு ஆதரவுடன் மட்டக்களப்பிலும் எதிர்வரும் 18.10.2021 அன்றிலிருந்து நடாத்துவதாக தீர்மானித்துள்ளார்கள். இவ் கவனஈர்ப்பு போராட்டமானது தரை மற்றும் கடல் வழி என நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்..! வெல்லாவெளி யில் காலை 8, மணி, கொக்கட்டிச்சோலையில் 8.30 மணி, ஆயித்தியமலையில் 9.30, மணி . வந்தாறுமூலையில் 10.30,மணி, கிரானில் 11.30,மணி, என ஐந்து இடங்களில் விவசாயிகளால் இடம்பெறும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் அந்தந்த பகுதி பிரதேச தவிசாளர்கள் உறுப்பினர்கள், தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சி தொகுதி கிளை, பிரதேச கிளை உறுப்பினர்கள், வாலிபர் அணி உறுப்பினர்கள், மகளீர் அணி உறுப்பினர்களும் உள்ளிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பு பங்காளிகட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ளவது என முடிவு செய்யப்பட்டது. வட கிழக்கு மக்களின் மிக முக்கிய வாழ்வாதாரங்களை காப்பாற்றும் போராட்டங்களிற்கு அனைவரையும் அணிதிரளுமாறு பாராளுமன்ற உறுப்பினனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக அழைப்பு விடுத்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்