விவசாயிகள் எதிர்நோக்கும்பஞ்சத்தை போக்க அரசு உடனடி உதவ வேண்டும் – அடைக்கலநாதன் (பா. உ.)

அசேதனப் பசளையை தவிர்த்து சேதனப் பசளையை விவசாயிகளுக்கு அறிமுகப் படுத்துவதால் விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலின் பலனை அவர்கள் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு அவர்களுடைய பொருளாதாரச் சமைகளைக் குறைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதற்கு அரசின் திட்டமிடாத செயல்கள் காரணமாக அமைவதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தனது ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வியாழக் கிழமை (14.10.2021) தனது மன்னார் அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையில்;
நாட்டில் நடைபெற்றுக் கொண்டுவரும் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் விவசாயிகளின் வாழ்க்கையும் அந்நிலைக்குத் தள்ளப்படாமல் இருப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

விவசாயி என்பவன் நிலத்தை நம்பியே வாழ்பவன். அத்துடன் நமக்கு உணவளிப்பவனும் அவனே. அவ்வாறு வாழும் விவசாயி, நம்மையும் வாழவைக்கும் அவன், அந்நிலத்தின் பலனை எடுப்பதற்கு வேண்டிய முதலை, தனது பொருள்களை அடைமானம் வைத்தும், வங்கியில் கடன் பட்டும், காணிகளைக் குத்தகைக்கு எடுத்தும், இயற்கை அல்லது செயற்கை அழிவுகளைகளையும் தாண்டி, இறுதியாக பெற்ற பலனை நல்ல விதமாக விற்று கையில் பணமாக எடுக்கு மட்டும் வரக்கூடிய சவால்களையும் தாண்டி வாழும் விவசாயிகளுக்கு அரசாங்கம் கை குடுக்க வேண்டும்.
எனவே, அரசாங்கம் விவசாயிகளுக்கு;

உரத்தை வழங்க வேண்டும்

இயற்கை உரத்துடன் செயற்கை உரத்தையும் சேர்த்து பாவிக்கச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு செய்தால் விவசாயிகளை கஷ்டக் கோட்டினுள்ளே சிக்குப்படாமல் காப்பாற்ற முடியும். இதற்கு அரசாங்கந்தான் முன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அடைகலநாதன் தெரிவித்தார்

விவசாயிகள் எதிர்நோக்கும்பஞ்சத்தை போக்க அரசு உடனடி உதவ வேண்டும் – அடைக்கலநாதன் (பா. உ.)

வாஸ் கூஞ்ஞ