விவசாயிகளின் போராட்டம் (ஊடக அறிக்கை )

16.10.2021
ஊடக அறிக்கை

விவசாயிகளின் போராட்டம்

நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் தோட்டத்தொழிலையும் மிக மோசமாக பாதித்திருக்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் காலபோக /பெரும்போக நெற் பயிர்ச்செய்கை தற்போது ஆரம்பமாகியுள்ளது. ஓரிரு வாரங்களுக்குள் பசளை மற்றும் கிருமி நாசினி அத்தியாவசியமாக தேவைப்படும். இத்தேவையை உடனடியாக பூர்த்திசெய்யுமாறு கோரி வடக்கு கிழக்கிலுள்ள சகல கமநல சேவைகள் மையங்களுக்கூடாக 18ம் திகதி திங்கற்கிழமை காலை 9.00 மணிக்கு ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன. கோவிட் தொற்று காரணமாக சிறிய எண்ணிக்கையானவர்கள், சமூக இடைவெளிகளைப் பேணி இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பல இடங்களில் ஓரே நேரத்தில் நடைபெறவிருக்கும் இவ்வார்ப்பாட்டங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

ம.ஆ.சுமந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்

ஊடக அறிக்கையை சிங்களத்தில் வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

This press release is in Sinhala Language. If you prefer to read this article please click below.

விவசாயிகளின் போராட்டம்

விவசாயிகளின் போராட்டம் (ஊடக அறிக்கை )

எஸ் தில்லைநாதன்