
posted 8th October 2021

கல்முனை மாநகர பிரதேசங்களில் பொருளாதார வசதி குறைந்த குடும்பங்களுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு, கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
கிராம சேவகர் பிரிவுகள் தோறும் கிராம சேவை உத்தியோகத்தர்களினால் அடையாளப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு தையல் உபகரணங்கள், ஆடு மற்றும் கோழி வளர்ப்புக்கான ஏற்பாடு, மரக்கறி வியாபாரத்திற்கான வண்டில் வசதி, பலசரக்கு சில்லறைக் கடைக்கான பொருட்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிக்கான உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூரின் விசேட வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இவ்வாழ்வாதார உதவி வழங்கும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வேலைத் திட்டத்தை தமது அமைப்பு வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனுசரணை வழங்கி வருகின்ற வை.டபிள்யு.எம்.ஏ. (YWMA) நிறுவனத்திற்கு பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம்