
posted 10th October 2021
கோண்டாவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவரின் வீட்டில் இருந்து இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் வீட்டில் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அவரின் வீடு நேற்று சோதனையிடப்பட்டது.
இதன்போது மறைத்து வைக்கப்பட்ட இரு வாள்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன், 18 வயதான சந்தேகநபரும் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

எஸ் தில்லைநாதன்