
posted 24th October 2021
வவுனியாவில் நேற்றய தினம் பெய்த கடும்மழை மற்றும் காற்றினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளன.
வவுனியாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகின்றது.
இந்நிலையில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்த புலவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் சில வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இதேவேளை, அரபாத் நகர் பகுதியில் வீசிய கடும் காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களைச் சேகரித்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்