வரவேற்கின்றது ஐக்கிய காங்கிரஸ்
வரவேற்கின்றது ஐக்கிய காங்கிரஸ்

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை எப்படி கொண்டு வருவது என்பதற்கான குழுவின் தலைவராக ஞானசார தேரரை ஜனாதிபதி கோட்டாபய நியமித்திருப்பது மிகச் சிறந்த நடவடிக்கையாகும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஒரே நாடு ஒரே சட்டம் என்பது நடைமுறையில் உள்ள நீதிமன்ற சட்டங்களில் இன, மத, ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லாது அனைவருக்கும் ஒரே சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தமாகும்.

ஆனால் நடைமுறையில் பல காலமாக நமது நாட்டில் ஆளுக்கொரு சட்டத்தை பொலிசாரும் மற்றவர்களும் கடைப்பிடிப்பதை காணலாம்.

ஒரு புத்தபிக்கு அரசாங்க ஊழியருக்கு கன்னத்தில் அறைந்தால் அவர் கைது செய்யப்படுவதில்லை. ஆனால் ஏனைய சமூகத்தலைவர் ஒரு சிங்களவரை ஏசினால் போதும் அவர் கைது செய்யப்படுவார்.

சிங்களவர் ஒருவரின் காணியை முஸ்லிம் அல்லது தமிழர் பிழையாக அபகரித்தால் சட்டம் எழுந்து நின்று விளையாடும். அதையே ஒரு சிங்களவர் அல்லது தமிழர் செய்தால் சட்டம் கண் மூடியிருக்கும்.

இப்படி ஆளுக்கொரு சட்டம் என்றிலாது அனைவருக்கும் ஒரே சட்டத்தை கடைப் பிடிப்பதே ஒரே நாடு ஒரே சட்டம் என்பதாகும்.
அதனை விடுத்து இதனை முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவதே ஒரே நாடு ஒரே சட்டம் என கடந்த நல்லாட்சி அரசு விளக்கியதன் காரணமாக ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் முஸ்லிம் திருமண சட்டத்தை நீக்குவது மட்டும் தான் என்ற பிழையான சிந்தனை பல பௌத்த பிக்குகளிடம் உள்ளன. அதனை ஜனாதிபதி செய்ய வேண்டும் என எதிர் பார்க்கின்றனர். ஞானசார தேரரும் இதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

இதனால் இது பற்றி ஆராயும் குழுவுக்கு ஞானசார தேரரை தலைவராகவும், அரச ஆதரவாளர்களை சேர்க்காமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை தூற்றும் ஐ தே க. சஜித் ஆதரவு முஸ்லிம்களையும் இதன் உறுப்பினர்களாக நியமித்திருப்பது ஜனாதிபதியின் தூர நோக்கு கொண்ட சிறந்த நடவடிக்கையாக ஐக்கிய காங்கிரஸ் கட்சி கருதுகிறது.

வரவேற்கின்றது ஐக்கிய காங்கிரஸ்

ஏ.எல்.எம்.சலீம்