
posted 4th October 2021

வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டடத் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
கல்லூரியின் பதில் அதிபர் செல்வி சிந்தாமணி ஶ்ரீஜெயலட்சுமி தலைமையில் இன்று திங்கட்கிழமை (04) முற்பகல் இத் திறப்புவிழா இடம்பற்றது.
இலங்கை இந்திய நட்புறவுத் திட்டத்தில் 25.7மில்லியன் ரூபாய் செலவில் இக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.
இதனை இன்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சூம் தொழில்நுட்பத்தினூடாக கலந்து சிறப்பித்தார்.
இத் திறப்பு விழாவில் வடமாகாண ஆளுநர் திருமதி P.H.M.சாள்ஸ், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்திய துணைத் தூதரக அதிகாரி மீனாட்சி சுந்தரம் கிருஸ்ணமூர்த்தி, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் செ.உதயகுமார், கரவெட்டி பிரதேச செயலாளர் ஈ.தயாரூபன், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்