வட மாகாணத்தின் காலநிலை (29.10.2021)
வட மாகாணத்தின் காலநிலை (29.10.2021)

உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா

நேற்று வியாழக்கிழமை காலையுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினாதீவில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று வெெள்ளிக்கிழமை நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 20.6 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதிகூடிய மழைவீழ்ச்சியாக நயினாதீவுப் பகுதியில் மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளது.எனினும் இதுவரை பாதிப்புகள் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

வங்காள விரிகுடாவின் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை காணப்படுவதோடு மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே பொதுமக்கள் தங்களையும் தங்களது உடைமைகளையும் குறித்த காலப் பகுதியில் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

குறிப்பாக கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60- 65 கிலோமீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் அந்த காலப்பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் குறிப்பாக கரையோரப் பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த காலப்பகுதியில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்றார்.

வட மாகாணத்தின் காலநிலை (29.10.2021)

எஸ் தில்லைநாதன்