
posted 19th October 2021
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த ரயில் மோதியதில் 20 பசு மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளன.
கிளிநொச்சியில் இருந்து நேற்றுக் (19.10.2021) காலை 10.30 மணியளவில் யாழ். நோக்கிப் பயணித்த பரீட்சார்த்த ரயில் மோதியதிலேயே இந்த 20 பசு மாடுகளும் உயிரிழந்துள்ளன.
யாழ், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனி ஒருவருக்குச் சொந்தமான குறித்த மாடுகள், மேய்ச்சலுக்காகப் பிறிதொரு இடத்துக்குச் சென்ற வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எஸ் தில்லைநாதன்