
posted 7th October 2021
கற்கடதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய ட்ரோலர் படகு மோதி சேதப்படுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் - குருநகர் பகுதி மீனவர்கள் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில் நடவடிக்கையை புறக்கணித்துள்ளனர்.
இதனால், மீன்பிடிப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் இருந்து விலகியுள்ளனர்.
கடற்படையினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என்றும் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் இந்திய ட்ரோலர் படகுகளைத் தடுத்து நிறுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

எஸ் தில்லைநாதன்