
posted 21st October 2021
யாழ்.மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் இன்று புதன்கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண பொது நூலக கேட்போர் கூடத்தில் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன் ஆகியோரால் இது உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் யாழ் மாநகர சபை உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்ட யாழ்.மாநகரசபையின் இணையத்தளத்தில் யாழ் மாநர சபை தொடர்பான சகல தகவல்களையும் சேவைகளையும் பொதுமக்கள் இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

எஸ் தில்லைநாதன்