யாழ் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் சிறிசற்குணராஜா தலைமையில் இன்று (07/10/2021) வியாழக்கிழமை நிகழ்நிலையில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக கைலாசவதி கரையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்ககழகத்தில் யூரியூப் மற்றும் முகப்புத்தக பங்கங்களினூடாக நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.

இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுமார் 1700 பேரின் பட்டங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

நாட்டில் நிலவும் கொரோனாப் பெருந்தொற்று நிலைமைகள் காரணமாக பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது என்றும், அதனை நிகழ்நிலையில் நடத்துவதற்கு தடை ஏதுமில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுத்தியிருந்த நிலையில் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக இன்று நிகழ்நிலைப் பட்டமளிப்பு நடைபெற்றது.

இதே நேரம் நாடு வழமைக்குத் திரும்பியதும் மாணவர்களுக்கான சம்பிரதாயபூர்வ பட்டமளிப்பு விழா நடத்தப்படவுள்ளது எனத் துணைவேந்தர் அறிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி

எஸ் தில்லைநாதன்