
posted 1st October 2021
'பட்டா படி' ரக வாகனத்தை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
தென்மராட்சி - உசன் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இதில், கிளிநொச்சி அம்பாள் குளத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் சுரேஷ்குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்தார்
பளையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா படி ரக வாகனத்தின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்