மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

வடமராட்சி முள்ளிப் பாலத்தடியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (26) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் மத்திய கல்லூரி வீதி நெல்லியடியைச் சேர்ந்த பொன்னுத்துரை கண்டீபன் (வயது-40) என்பவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

புலோலி- கொடிகாமம் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் முள்ளிப் பாலத்துடன் மோதுண்ட நிலையில் ஒருவர் காயங்களுடன் கிடப்பதாக நெல்லியடிப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அங்கு சென்ற பொலிசார் காயங்களுடன் இருந்தவரை பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்

எஸ் தில்லைநாதன்