மேலும் 2. 60 kg கேரளா கஞ்சா அகப்பட்டது
மேலும் 2. 60 kg கேரளா கஞ்சா அகப்பட்டது

மன்னார் நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் கேரளா கஞ்சாவுடன் கைது செய்ய்பட்ட சந்தேக நபர் ஒருவரை தடுத்து வைத்து விசாரனையை மேற்கொண்ட பொலிசார் மேலும் கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாட்டுப் பகுதியில் பகுதியில் மன்னார் பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் கேரளா கஞ்சா 10கிலோ 370 கிராம் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மன்னார் கீரி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் (வயது 18) பொலிஸாரினால் கடந்த 23.10.2021 கைது செய்யபட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மன்னார் நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் இச் சந்தேக நபரை பொலிசார் தடுத்து வைத்து தொடர் விசாரனையில் ஈடுபட்டனர்.

இதன்போது இச் சந்தேக நபரிடமிருந்து பெறப்பட்ட தகவலைத் தொடர்ந்து மேலும் 2 கிலோ 60 கிராம் கேரளா கஞ்சா செவ்வாய் கிழமை (26) கைப்பற்றப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ள வீரசிங்கவின் பணிப்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, மன்னார் பொலிஸ் நிலைய தற்போதைய வேலைபார்க்கும் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் மஞ்சுள, மன்னார் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி ள. ஐ .திலங்கவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் 2. 60 kg கேரளா கஞ்சா அகப்பட்டது

வாஸ் கூஞ்ஞ