
posted 8th October 2021

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்க்குட்பட்ட இந்திராபுரம் கிரம சேவகர் பிரிவில் பகுதியில் வீடின்றி வறுமையில் வாடியிருந்த முத்தையா விஜயகுமார் என்பவருக்கு இராணுவத்தினரால் வீடு ஒன்று அமைக்கப்பட்டு இன்றையதினம் காலை 11 மணியளவில் கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. இதில் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் கொடிதுவக்கு கலந்துகொண்டு இல்லத்தை குறித்த முத்தையா விஜயகுமாரிடம் கையளித்துள்ளதுடன் பரிசுப் பொருள்களையும் வழங்கி வைத்து மரமும் நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் பளை பொலிஸ் பொறுப்பதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலர், கிராம சேவகர், 551 ஆம் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கழிந்த ஜெயவர்த்தனா,552 ம் படைப்பிரிவு படை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன்