மீன்பிடி வளாகம் மன்னாரில்  அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்.
மீன்பிடி வளாகம் மன்னாரில்  அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்.

மன்னார் மாவட்டத்தில் மீன்பிடி வளாகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக இங்குள்ள கல்விமான்களாலும் அரசியல் வாதிகளாலும் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை தற்பொழுது ஆரம்ப கட்ட முன்னெடுப்புக்கள் ஆரம்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது மன்னார் மாவட்டத்தில் பெருபான்மையான மக்களாக மீனவ சமூகம் காணப்படுகின்றது. இதனால் இம் மாவட்டத்தில் மீன்பிடி வளாகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக இங்குள்ள கல்விமான்களாலும் அரசியல் வாதிகளாலும் அரசாங்கத்திடம் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் அன்மையில் ஆரம்பமான வவுனியா பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து இக் கோரிக்கைகள் தற்பொழுது கவனத்துக்கு எடுக்கப்பட்ட நிலையில் மீன்பிடி வளாத்தினை மன்னார் மாவட்டத்தில் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் திங்கள் கிழமை (04.10.2021) காலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் வவுனியா பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல், மற்றும் பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மீன்பிடி வளாகம் மன்னாரில்  அமைப்பதற்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்.

வாஸ் கூஞ்ஞ