
posted 30th October 2021
வவுனியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளான 44 பேருடன் வடக்கில் இன்று 47 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 192 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தன.
அவற்றின் அடிப்படையில்,
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 44 பேர்
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்
யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவர்
என தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன்