
posted 22nd October 2021
யாழில் 6 வயது சிறுமி உட்பட வடக்கில் மேலும் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (21.10.2021) 65 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் - 04 பேர்
சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 03 பேர்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் - 02 பேர் (6 வயது சிறுமி மற்றும் உயிரிழந்த 26 வயது யுவதி)
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்
வீனஸ் ஹொஸ்பிற்றலில் - ஒருவர்
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று நடத்தப்பட்ட பி. சி. ஆர். சோதனையிலேயே உயிரிழந்த 26 வயது யுவதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தென்மராட்சி, சாவகச்சேரி, மடத்தடி, முதலாவது ஒழுங்கையை சேர்ந்த குணேஷ் தர்ஷிகா என்ற 26 வயது யுவதிக்கே உயிரிழந்த நிலையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக ஆய்வுகூட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்