
posted 9th October 2021
வவுனியாவில் 8 பேர், யாழ்ப்பாணத்தில் 7 பேர் என வடக்கு மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை 28 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்தில் நேற்று 151 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 28 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதன்படி, வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கும், வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவருக்குமாக வவுனியா மாவட்டத்தில் 08 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ். போதனா மருத்துவமனையில் 4 பேருக்கும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 2 பேருக்கும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் ஒருவருக்குமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
மன்னார் பொது மருத்துவமனையில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு (வெலிஓயா) மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் 2 பேருக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்குமாக 6 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பொது மருத்துவமனையில் ஒருவர் தெற்றாளியாக அடையாளம் காணப்பட்டார்.
கொரோனா தொற்றால் முல்லைத்தீவில் வெள்ளிக்கிழமை (08/10/2021) ஒருவர் உயிரிழந்தார்.
முல்லைத்தீவு பொது மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாகா இறந்தவரின் உடலில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ். போதனா மருத்துவமனையின் ஆய்வுகூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இடம்பெற்ற பரிசோதனைகளிலேயே உயிரிழந்தவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் பாலசிங்கம் சீதை (வயது 79) என்பவராவார்.

எஸ் தில்லைநாதன்