மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (06.10.2021)

யாழ்ப்பாணத்தில் 11 பேர் உட்பட வடக்கில் புதன்கிழமை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 138 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 5 பேருக்கும்

தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 3 பேருக்கும்

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் இருவருக்கும்

கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும் என மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் இருவருக்கும்

மல்லாவி ஆதார மருத்துவமனையில் இருவருக்கும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் நால்வருக்கும்

கிளிநொச்சி பொது மருத்துவமனையில் இருவருக்கும்

உருத்திரபுரம் பிரதேச மருத்துவமனையில் ஒருவருக்கும்

இரணைமடு விமானப்படை முகாமில் ஒருவருக்கும் என கிளிநொச்சியில் நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவருக்கும்

மன்னார் பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்தார் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் ஆய்வுகூட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மல்லாகத்தை சேர்ந்த கதிர்காமதம்பி கதர்காமதாஸ் (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இவரின் சடலம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (06.10.2021)

எஸ் தில்லைநாதன்