
posted 13th October 2021
வவுனியாவில் 9 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 15 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் நடத்தப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனை முடிவுகளிலேயே இந்தத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று 75 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 5 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் வவுனியா மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதேபோன்று, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 147 பேரின் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் வவுனியா பொது மருத்துவமனையில் 2 பேரும், செட்டிக்குளம் ஆதார மருத்துவமனையில் 2 பேரும் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.
யாழ். போதனா மருத்துவமனையில் 4 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒருவரும் என யாழ். மாவட்டத்தில் ஐந்து பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

எஸ் தில்லைநாதன்