மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (22.10.2021)

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வட மாகாணத்தில் உயிரிழந்த மூதாட்டி உட்பட மேலும் 15 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 165 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் - 02 பேர்

யாழ். போதனா வைத்தியசாலையில் - 02 பேர்

முழங்காவில் கடற்படை முகாமில் - 02 பேர்

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர்

காங்கேசன்துறை கடற்படை முகாமில் - ஒருவர், ஆவர்.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (22.10.2021)

எஸ் தில்லைநாதன்