மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (04.10.2021) - மன்னார்

மன்னாரில் திங்கள் கிழமை (04.10.2021) அன்று மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மன்னார் மாவட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2147 ஆக உயர்ந்துள்ளதை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர் த.வினோதனின் திங்கள் கிழமை (04.10.2021) அன்றைய தின அறிக்கையில்;

திங்கள் கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் 09 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதில்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒருவரும்

வங்காலை மாவட்ட வைத்தியசாலையில் 02 நபர்களும்

சிலாவத்துறை மாவட்ட வைத்தியசாலையில் ஒருவரும்

மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருமாக
இனம் காணப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த மாதம் (ஒக்டோபர்) கொரோனா தொற்றாளர்கள் 27 ஆக உயர்ந்துள்ளது.

இந்த மாதம் 60 பேருக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரைக்கும் 29,022 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனையில் 2,147 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முதலாவது தடுப்பூசி 79,312 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 59,776 பேருக்கும் தடுப்பூசி இதுவரை ஏற்றப்பட்டுள்ளதாக பணிப்பாளரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மாவட்ட ரீதியான கோவிட் தொற்று அப்டேற் (04.10.2021) - மன்னார்

வாஸ் கூஞ்ஞ