மாவட்ட ரீதியாக கோவிட் தொற்றும் உயிரிழப்பும் (13.10.2021)

கொரோனா தொற்று காரணமாக வவுனியா மாவடத்தில் நேற்று புதன்கிழமை ஒருவர் உயிரிழந்தார்.
வவுனியா பொது மருத்துவமனையால் அனுப்பப்பட்ட மாதிரிகள் நேற்று யாழ். போதனா மருத்துவமனையில் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இறந்தவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர் வவுனியாவை சேர்ந்த ஆர். ராக்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு தொற்றால் உயிரிழந்தார்.

எஸ் தில்லைநாதன்
காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேர் உட்பட 19 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (13.10.2021) தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் நேற்று 147 பேரின் மாதிரிகள் பி. சி. ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி,

யாழ் மாவட்டம்

காரைநகர் மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேர்

யாழ். போதான மருத்துவமனையில் 3 பேர்

பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 2 பேர்

கோப்பாய் பிரதேச மருத்துவமனையில் 2 பேர்

நொதேர்ன் சென்றல் தனியார் மருத்துவமனையில் ஒருவர்

என 19 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

மன்னார் மாவட்டம்

மன்னார் பொது மருத்துவமனையில் இருவர்

மன்னார் கடற்படை முகாமில் இருவர்

என மாவட்டத்தில் 4 பேருக்கும்

வவுனியா மாவட்டம்

வவுனியா பொது மருத்துவமனையில் ஒருவர்

நெடுங்கேணி பிரதேச மருத்துவமனையில் ஒருவர்

என மாவட்டத்தில் இருவருக்கும்,

முல்லைத்தீவு மாவட்டம்

மல்லாவி ஆதார மருத்துவமனையில் ஒருவருக்கும்

கிளிநொச்சி பொது மருத்துவமனையில் ஒருவருக்கும்

தொற்று இனங்காணப்பட்டது.

மாவட்ட ரீதியாக கோவிட் தொற்றும் உயிரிழப்பும் (13.10.2021)

எஸ் தில்லைநாதன்