
posted 12th October 2021
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் சைவ கலை பண்பாட்டுப் பேரவை வன்னிப் பிரதேசத்தைச் சேர்ந்த
மாணவர்களுக்கு கல்விச் செயற் திட்டங்களை உதவிகளை நேற்று திங்கட்கிழமை (11.10.2021) வழங்கியுள்ளது
வவுனியா, மன்னார் மாவட்ட ங்களைச் சார்ந்த கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பு பெறுபேறுகளைப் பெற்ற பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட 13 மாணவர்களைத் தெரிவு செய்து தலா ஒவ்வொரு மாணவர்களுக்கும் 10000 ரூபா நிதி, 3000 ரூபா பெருமதியான அத்தியவசியமான உணவுப் பொருள்களாக (அரிசி,சீனி.மா,தேயிலை, பருப்பு), வீதம் கல்வி உபகரணங்களும் (கொப்பிகள்) வழங்கப்பட்டன.
இவ் உதவித் திட்டம் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலைகளான கணேசுவரா மகா வித்தியாலயம் - பாவற்குளம், வவுனியா மகா வித்தியாலயம், கலைமகள் வித்தியாலயம் - நெடுங்கேணி, ஶ்ரீநாகராசா வித்தியாலயம் - வவுனியா சோமரசன்குளம் மகா வித்தியாலயம், ஒலுமடு மகா வித்தியாலயம் - நெடுங்கேணி, நெடுங்கேணி மகா வித்தியாலயம் மன்னார் மாவட்டத்தைச் சார்ந்த சென்சேவியர் ஆண்கள் பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவரகளது இல்லங்களிலும் , பாடசாலைகளிலும் நேரடியாகச் சென்று நிதியும் , உதவிப் பொருள்களும் அமுதகலாசுரபி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் அவரோடு இணைந்த ஆச்சிரம தொண்டர்களாலும் கையளிக்கப்பட்டன.
இவ் உதவித் திட்டத்தில் செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் பு. சுஜீவன், வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் திரு த. யோகராசா, உறுப்பினர் வே. குகதாசன், வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொ. தேவராசா, அறப்பணிச் செயற்பாட்டாளர் இ. தயாபரன் ஆகியோர்களும் பங்குபற்றினார்கள்

எஸ் தில்லைநாதன்