
posted 6th October 2021
யாழ் நகரப் பகுதியில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதானிப்பு நிலைய பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார்
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் காணப்படும் மழையுடன் கூடிய காலநிலையில்;
அச்சுவேலியில் 12.3 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும்
பருத்தித்துறையில் 5.4
நயினாதீவில் 4.1
யாழ்ப்பாணத்தில் 62.3
யாழ்ப்பாண நகர் பகுதியில் 79.0
நெடுந்தீவில் 2.2
சாவகச்சேரியில் 10.8
தெல்லிப்பளையில் 15.5
அம்பனில் 15.5
திருநெல்வேலியில் 41.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்
தற்போதுள்ள மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் சில நாட்களுக்கு நீடிக்கும் வாய்ப்பு ள்ளதாகவும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன்