
posted 19th October 2021

2021.10.18 பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எட்டாம் வட்டாரம் பேசாலை பகுதியில், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் கேரளா கஞ்சா 20கிலோ 215கிராம், கேரளா கஞ்சா போதைப்பொருள்,தம்வசம்வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரினால் நேற்று (18.10.2021)மாலை சந்தேக நபர் ஒருவர் கைது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுள்ளவீரசிங்க வின் பணிப்பில், மன்னார் மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி குமார பள்ளேவள ,உ.பொ.ப.றாமநாயக தலைமையிலான அணியினரே மேற்படி கேரள கஞ்சாவினை கைப்பெற்றி சந்தேக நபர்ரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதில் சந்தேகநபர் நபர் பேசாலை 8ம் வட்டாரத்தை சேர்ந்த 45 வயதுடைய பெண் என்பது குறிப்பிடதக்கது,
மேற்படி கைது செய்யப்பட்ட நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா, மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபடுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

வாஸ் கூஞ்ஞ