
posted 1st October 2021
மன்னாரில் வியாழக்கிழமை (30.09.2021) ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் மன்னாரில் இதுவரைக்கும் 2120 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்தாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் வெளியிடும் தனது நாளாந்த அறிக்கையில் 30ந் திகதி பதிவில் இதை பதிவுட்டுள்ளார்.
பணிப்பாளர் த.வினோதன் வியாழக்கிழமை (30) மன்னாரின் கொரோனா தொடர்பான தனது அறிக்கையில் இன்றையத் தினம் 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும், இதில்;
மன்னார் பொது வைத்தியசாலையில் 4 பேரும்
கடற்படையைச் சார்ந்த ஒருவரும்
விடத்தல்தீவு ஒருவரும்
வங்காலை மாவட்ட வைத்திசாலைகளில் ஒருவரும்
மொத்தமாக 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 1202 பி.சீ.ஆர். பரிசோதனையில் மொத்தமாக 436 பேர் கொரோனா தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 28,962 பி.சீ.ஆர். பரிசோதனைகளில் 2120 பேர் கொரோனா தொற்றாளர்களாக காணப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் (செப்படம்பர்) 30 ந் திகதி வரை கொரோனா முதலாவது தடுப்பூசி 78,596 பேருக்கும் இரண்டாவது தடுப்பூசி 59,762 பேருக்கும் எற்றப்பட்ட நிலையில் இருப்பதாக அவரின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 23 ஆகவே பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ