
posted 27th October 2021
மொழி சமத்துவத்தை மேம்படுத்துவதன் ஊடாக சமூக ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக தேசிய ரீதியில் செயற்பட்டு வரும் கிழக்கு அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தேசி ய மொழிகள் உரிமை மன்னார் மாவட்ட செயலகப் பிரிவும், முன்னார் மாவட்ட மாற்று திறனாளிகள் பெண்கள் அமைப்பும் இணைந்து இவ் விசேட செயலமர்வை மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் செவ்வாய் கிழமை (26.10.2021) காலை 10 மணியளவில் நடாத்தினர்.
குறித்த நிகழ்வில் தேசிய மொழிகள் மேம்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் பிரதிப்பனிப்பாளர் கொள்கையாக்கல் மற்றும் கற்பித்தல் நிபுணர்களால் மொழிக் கொள்கை தொடர்பான விசேட விரிவுரைகள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மைய செயற்படுத்துனர்கள் மற்றும் மன்னார் நிர்வாக துறை உயர் அதிகாரிகள் பொலிஸார் ஊடகவியளாலர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த கருத்தமர்வில் மொழி ரீதியான உரிமைகள் தொடர்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக பங்கு பற்றுனர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அவை அரச கருமொழி ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன், குறித்த செயற்திட்டம் இலைங்கையில் உள்ள 8 மாவட்டங்களில் அதாவது மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம், அனுராதபுரம், மொனராகலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

வாஸ் கூஞ்ஞ