மன்னாரில் 'பைசர்' இரண்டாவது தடுப்பூசிக்கான இறுதி நாள் புதன் கிழமை (06.10.2021)

கொரொணாவினால் ஏற்பட்ட அசௌகரியங்களினால் இவ்விண்டாவது தடுப்பூசியைப் போடத்தவறியவர்கள் எதிர்வரும் புதன் கிழமையின் (06.10.2021) முன்னர் போடும்படியாகவும், அன்றுதான் கடைசி நாளென்பதாலும் சந்தர்ப்பத்தை நழுவ விடவேண்டாமெனவும் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் அழைப்பு விடுத்துள்ளார்.

பணிப்பாளர் கொரோனா தடுப்பூசி தொடர்பாக விடுத்திருக்கும் அழைப்பில்;

இவ்வூசியை மன்னார் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளைத் தொடர்பு கொண்டு அதனை பெற்றுக் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இவ் 'பைசர்'; தடுப்பூசி மருந்தானது மிகை குளிர் நிலையில் பேணப்படும் ஒன்றாக இருப்பதால் குறிப்பிட்ட காலத்தினுள் இம் மருந்து செலுத்தி முடிக்கப்பட வேண்டியிருப்பதால் இத் தடுப்பூசி செலுத்தும் இறுதி நாள் புதன் கிழமையே எனவும் அவர் மேலும் தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 'பைசர்' இரண்டாவது தடுப்பூசிக்கான இறுதி நாள் புதன் கிழமை (06.10.2021)

வாஸ் கூஞ்ஞ