
posted 24th October 2021
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் மேற்குப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து வாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் 22/10 வெள்ளிக்கிழமை இரவு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வாள் மற்றும் ஆபத்து விளைவிக்கக்கூடிய இரண்டு கைக் கொடரிகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.இருப்பினும் சந்தேக நபர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.மீட்கப்பட்ட ஆயுதங்களை இராணுவத்தினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்