மதுபோதையில் இருந்த தொழிலாளி தீ பற்றியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் வாகனப் பெற்றோல் ஆடையில் பட்டதை அறியாது புகைப்பிடித்த தொழிலாளி தீ பற்றியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

சத்தியசீலன் தர்மசீலன் என்னும் 45 வயதுடைய அளவெட்டி மேற்கு, அளவெட்டி என்னும் முகவரியுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த நபர் அளவெட்டியில் கடந்த 25ஆம் திகதி மதுபானம் அருந்திய பின்பு மோட்டார் சைக்கிளைத் திருத்திய வேளை, அவர் அணிந்திருந்த சாரத்தில் பெற்றோல் பட்டுள்ளது. இதை அறியாது இரவு 10 மணியளவில் அவர் பீடி பற்றியபோது சாரத்தில் நெருப்பு பட்டு தீ எரிந்துள்ளது.

உடனே தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் இருந்த தொழிலாளி தீ பற்றியதில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்