
posted 21st October 2021
விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து காஸ் சிலிண்டருடன் சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டார்.
விலை அதிகரிக்கப்பட்டு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசியப் பொருள்களுடன் அவர் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார்.
இதன்போது, சிமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமையல் எரிவாயு சிலிண்டரை சுமந்தும், கழுத்தில் தூக்கு கயிற்றை அணிந்தும் தனது எதிர்ப்பை அவர் நேற்று வெளியிட்டார்.
இதன்போது, மக்களை பெரும் சுமைக்குள் தள்ளியுள்ளதாக அரசாங்கத்தை அவர் சபையில் கடுமையாக விமர்சித்தார்.
இதன்போது பிரதேச சபை உறுப்பினரின் போராட்டம் நியாயமானது என பிரதேச சபைத் தவிசாளர் சபையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்