
posted 31st October 2021
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்று காலை முதல் மாலை வரை கொட்டித் தீர்த்த கடும் மழையினால் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
யாழ்ப்பாணத்தில் பருவ மழை கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வருகின்றது. இதனால் மறுஅறிவித்தல் வரை கரையோர மக்களை அவதனமாக இருக்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்திருந்தது.
தொடரும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

எஸ் தில்லைநாதன்