
posted 21st October 2021
இலங்கையில் நாடளாவிய ரீதியில் 200 இற்கும் குறைவான மாணவர்க ளைக் கொண்ட பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை முதல் மீள திறக்கப்பட்டபோதிலும், மாணவர்களின் வருகை வீழ்ச்சியடைந்து காணப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், ஆறு மாதங் களின் பின்னர் நேற்று மீள திறக் கப்பட்டன.
இந்நிலையில் ஆசிரியர்-அதிபர் சங்கங்களின் பணிப் புறக்கணிப்பு காரணமாக, பெரும்பாலான பாடசாலைகளில் இன்று கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை எனத் தெரி விக்கப்படுகிறது.
எனினும் சில பாடசாலை களில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சமுக மளித்திருந்ததோடு, கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றன எனக் கூறப்பட்டது.

எஸ் தில்லைநாதன்