
posted 25th October 2021
நாடளாவிய ரீதியிலுள்ள ஆரம்பப் பிரிவுகளை மாத்திரம் கொண்ட பாடசாலைகள் இன்று முதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற கொவிட் - 19 செயலணி கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கமைய குறித்த ஆரம்பப் பிரிவு பாடசாலைகளை ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.
கொவிட் - 19 வைரஸ் பரவல்வெகுவாகத் தணிந்து வரும் நிலையில், மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளைக் கட்டம், கட்டமாகத்திறந்து மாணவர்கல்வியை முன்னெடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படிகல்முனை வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள 58 ஆரம்பப் பிரிவு பாடசாலைகள் இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
மீள ஆரம்பிக்கப்பட்ட முதல் தினமான இன்று 60 வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்ததுடன் 85 வீதமான ஆசிரியர்களும் 99 வீதமான அதிபர் சேவையிலுள்ளவர்களும் கடமைக்கு சமூகமளித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம்