
posted 10th October 2021
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி ஏற்றல் தேசிய செயல்திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், நாளை முதல் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நெறிப்படுத்தலில், நல்லூர் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினால், இந்தச் செயல்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தினமும் முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை, பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.
எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்பட்ட மாணவர்களும், பணிபுரிவோரும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும், தடுப்பூசி ஏற்ற வரும் போது தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்